மதுரையில் மெட்ரோ ரயில்?: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

public

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் மதுரை மாநகரம் தற்போது திருமங்கலம், மேலூர், நாகமலை, புதுக்கோட்டை வரை விரிந்துள்ளது. சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக மதுரை உள்ளது . சென்னையைப் போல் மதுரையிலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை தற்போது 20 லட்சம் பேர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். சென்னையிலும் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதுபோன்று மதுரையிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *