மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

யானைகள் இறப்பு வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உத்தரவு!

யானைகள் இறப்பு வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உத்தரவு!

தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக காடுகளில் விலங்குகளைக் கொன்று உடலைக் கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று (பிப்ரவரி 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது, யானை மிகவும் முக்கியமான உயிரினம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. யானைகள் தந்தந்களுக்காக கடத்தப்படுவது சர்வதேச சந்தையாக வளர்ந்துள்ளது. தந்தந்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது ஏற்கத்தக்கதல்ல. யானைகளைப் பாதுகாப்பது நமது கடமை. யானைகள் மரணம் தொடர்பாகக் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. எனவே இவ்விவகாரத்தில் தமிழகத்தைத் தாண்டிய விசாரணை அவசியமாகிறது என்பதால் தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

புதன் 10 பிப் 2021