மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

பிப்ரவரி 15க்கு பிறகு தேர்தல் தேதி அறிவிப்பு?

பிப்ரவரி 15க்கு பிறகு தேர்தல் தேதி அறிவிப்பு?

மேற்குவங்கம், தமிழகம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் மாநில தேர்தல் தேதிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மே மாதத்துடன் மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களுக்கான ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரைத் தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.

அரசியல் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காகவும், தேர்தல் ஆய்வுப் பணிக்காகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காலை சென்னை வந்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜிவ் குமார், கூடுதல் செயலாளர் ஷிபாலி சரண் ஆகியோரும் வந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில், அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஒவ்வொரு கட்சியின் கருத்துகளையும் கேட்டறிந்தனர். அப்போது தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் பாதுகாப்புக்கு துணை இராணுவத்தை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியதாக. தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் குழு புதுச்சேரிக்குச் செல்கிறது. பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் தமிழகம் கேரளா மற்றும் புதுச்சேரியில் பயணம் மேற்கொள்ள உள்ளது.

இதைத்தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சென்றதும் விரிவாக ஆலோசித்த பிறகு தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 6 முதல் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வு தொடங்கும் மே 1 ஆம் தேதிக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் தேர்தலை முடிக்கத் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

புதன் 10 பிப் 2021