மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

துருவ் நடிக்க பயோபிக் படமியக்கும் மாரி செல்வராஜ் ?

துருவ் நடிக்க பயோபிக் படமியக்கும் மாரி செல்வராஜ் ?

முதல் படத்திலேயே தன்னை தனித்துவமாக நிரூபித்துவிட்ட இயக்குநர்களின் அடுத்தடுத்தப் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியான இயக்குநர்களில் ஒருவர் மாரிசெல்வராஜ்.

கதிர், ஆனந்தி நடிப்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது 'பரியேறும் பெருமாள்'. இந்தப் படம் கொடுத்த வெற்றியின் அறுவடையாக தனுஷை இயக்கும் வாய்ப்பை இரண்டாவது படத்திலேயே பெற்றார். அப்படி, தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. தற்பொழுது படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ். மாஞ்சோலை கொலை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறதாம். ஏப்ரல் 09ஆம் தேதி படத்தை வெளியிட டார்கெட் வைத்திருக்கிறது படக்குழு.

இப்படத்தைத் தொடர்ந்து, துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரிசெல்வராஜ். ஸ்போர்ட்ஸ் டிராமா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குறிப்பாக கால்பந்து மையமாகக் கொண்ட கதை. தூத்துக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த பிரபலமான கபடி வீரர் மனத்தி கணேசன். அரசின் அர்ஜூனா விருது பெற்றவர். தற்பொழுது இளம் கபடி வீரர்களுக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கிவருகிறார். இவரின் பயோபிக்கை தான் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

மனத்தி கணேசனாக துருவ் விக்ரம் நடிக்கிறார். கூடுதலாக, படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. இந்தப் படத்தை ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 10 பிப் 2021