மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

முதல்வர் வீட்டுக்கு  வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை மற்றும் சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடுகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் மற்றும் சேலத்தில் உள்ள வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அவசர கட்டுப்பாட்டு எண் 100க்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், முதல்வரின் வீடுகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் 2 வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் நபர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று முதல்வர் சேலம் செல்கிறார். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வேலூரில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, பேர்ணாம்பட்டு பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 10 பிப் 2021