மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: உளுந்து அல்வா!

ரிலாக்ஸ் டைம்: உளுந்து அல்வா!

அல்வாவில் பல வகைகள் உள்ளன. அதில் கோதுமையினால் செய்யப்படும் அல்வா பிரபலமானது. கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திரி, கேரட், பால், பீட்ரூட் போன்றவற்றால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு. அப்படிப்பட்ட அல்வாதான் இந்த உளுந்து அல்வாவும். மொத்தமாக செய்து வைத்துக்கொண்டு ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம். புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கால் கிலோ பச்சரிசி, கால் கிலோ உடைத்த உளுந்து இரண்டையும் தனித்தனியே வறுத்து ஆறியதும் அரைத்துக்கொள்ளவும். முக்கால் கிலோ கருப்பட்டியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். 100 கிராம் சுக்கு, 25 கிராம் ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கடாயில் 250 மில்லி நல்லெண்ணெயைச் சூடாக்கி 50 கிராம் முந்திரி, 50 கிராம் கிஸ்மிஸ் பழத்தை வறுத்து கருப்பட்டி கரைசல், அரிசி, உளுத்தம் மாவைப் போட்டு நன்றாக கிளறவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி தேவையான அளவு நெய் ஊற்றி கலந்து இறக்கவும்.

சிறப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 10 பிப் 2021