மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: அரிசி புட்டு

கிச்சன் கீர்த்தனா: அரிசி புட்டு

மற்ற உணவுகளைவிட ஆவியில் வேகவைத்த உணவுகள் வயிற்றுக்கு இதமாகவும், ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும். ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், ஆப்பம், சுண்டல், டோக்ளா, கொழுக்கட்டை போன்று சுவை நிறைந்த புட்டு வகை உணவுகளைப் பண்டிகைகளிலும் படைக்கலாம்; பார்ட்டிகளிலும் செய்து அசத்தலாம். அதற்கு இந்த அரிசி புட்டு உதவும்.

என்ன தேவை?

புழுங்கல் அரிசி - 2 கப்

சர்க்கரை - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

நெய், உடைத்த முந்திரித் துண்டுகள் - தலா 4 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியைச் சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விடாமல் நைஸாக அரைத்து எடுக்கவும். அரை கப் வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவுடன் தேவையான அளவு நீர்விட்டுப் பிசிறவும் (மாவு பிடித்தால் பிடிக்க வர வேண்டும்; உதிர்த்தால் உதிர வேண்டும்). பிசிறிய மாவை ஈரத்துணியில் போட்டு மூட்டை கட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு தட்டில் கொட்டிக் கட்டியில்லாமல் உதிர்த்து, சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, நெய்யுடன் இதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு

சாப்பிடுவதற்கு 5 நிமிடங்கள் முன்புதான் சர்க்கரை சேர்த்துக் கலக்க வேண்டும். இல்லையெனில், நீர்விட்டுக்கொள்ளும்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 10 பிப் 2021