மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

ட்விட்டர்: 1178 பேரின் கணக்குகளை நீக்க மத்திய அரசு வேண்டுகோள்!

ட்விட்டர்: 1178 பேரின் கணக்குகளை நீக்க மத்திய அரசு வேண்டுகோள்!

டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தவறான தகவல் வெளியிட்டு வன்முறையைத் தூண்ட முயலும் சுமார் 1178 பேரின் கணக்குகளை முடக்கவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்று ட்விட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில், ‘பட்டியலிடப்பட்ட 1178 கணக்குகள் பாகிஸ்தான் அல்லது காலிஸ்தான் ஆதரவாளர்களுடையது என்று பாதுகாப்பு முகமைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், சுதந்திரமான வெளிப்பாட்டின் அடிப்படைக் கொள்கையைப் பாதுகாக்கும்போது உள்ளூர் சட்டங்களை மதிக்கிறோம் என்று கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, ட்விட்டர் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் செய்த பல ட்வீட்களை லைக் செய்தார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதைக் கருத்தில்கொண்டு, கணக்குகளைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் உத்தரவை அவர் செயல்படுத்துவாரா என்ற கேள்வி எழுகிறது.

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மீதான நடுநிலைமை குறித்த கேள்விகள் எழுவதால் பிரபலங்களின் சில ட்வீட்களை விரும்புவதை அரசாங்கம் எதிர்க்கிறது என்று மத்திய அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

செவ்வாய் 9 பிப் 2021