jயானைகளின் புத்துணர்வு முகாம் தொடக்கம்!

public

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி யானைகளின் புத்துணர்வு முகாம் தொடங்கியதைத் தொடர்ந்து இதில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பாகப் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில், பவானி ஆற்றங்கரையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம், நேற்று (பிப்ரவரி 8) தொடங்கியுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத் தொடங்கியுள்ளன.

நேற்று மாலை வரை தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 26 யானைகள் முகாமுக்கு வந்துள்ளன. முகாமுக்கு வந்த யானைகள் அனைத்தும் லாரியில் இருந்து இறங்கியதும் நீண்ட தூர பயணம் காரணமாக தண்ணீர் தேடி சென்று தங்களது தாகத்தைத் தீர்த்து கொண்டன. ஒரு சில கோயில் யானைகள் சந்தோ‌ஷ மிகுதியில் துதிக்கையால் மண்ணை அள்ளி தன் உடல் முழுவதும் மீது வீசி உற்சாகத்தை வெளிப்படுத்தியது.

அதன் பின்னர் யானைகள் வனப்பத்ர காளியம்மன் கோயில் முன்பு அழைத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் யானைகள் அனைத்தும் கலந்து கொண்டன. தொடர்ந்து யானைகள் முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன. முகாமில் பங்கேற்ற யானைகள் அனைத்தும் நேற்று காலை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டன. பின்னர் குளிக்க சென்ற யானைகள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளித்து மகிழ்ந்தன.

முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு காட்டு யானைகளால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக முகாம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு மின்வேலி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு யானையுடன் இரு பாகன்கள், ஒரு உதவியாளர் வருகின்றனர். 48 நாட்கள் நடக்கும் இந்த முகாமில், யானைக்கு மருத்துவப் பரிசோதனை, சரிவிகித உணவு, எடை பராமரிப்பு, உடற்பயிற்சி ஆகியவை வழங்கப்பட இருக்கிறது.

புத்துணர்ச்சி முகாமுக்குச் செல்வதால், யானையின் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமாக இருக்க உதவுவதாகவும் மருத்துவர்களின் உதவியுடன் உடற்பயிற்சி, மருந்துகள் வழங்கப்படுவதால், அவற்றின் எடை குறைக்கப்பட்டு ஆரோக்கியம் அதிகரிக்க வாய்ப்பு உருவாவதாகவும் யானைப் பாகன்கள் தெரிவித்தனர்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *