மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க கதை ரெடி!

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க கதை ரெடி!

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் இருந்து விலகியிருந்த ஜோதிகா கம்பேக் கொடுத்த படம் 2015ல் வெளியான ‘36 வயதினிலேயே’. நாயகி முக்கியத்துவம் கொண்டப் படங்களாகத் தொடர்ச்சியாக நடித்தும் வருகிறார். இவரின் படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவையும் ஜோதிகாவையும் சேர்த்து ஒரு கதை ஒன்றை உருவாக்க பல இயக்குநர்களும் முயற்சி செய்துவருகிறார்கள். சொல்லப் போனால், நிறைய கதைகளையும் இருவருக்கும் சொல்லியும் வந்தார்கள். எந்தக் கதையும் இருவரையும் ஈர்க்கவில்லை என்பதால் சூர்யா - ஜோதிகா ஜோடி நடக்காமலேயே இருந்துவந்தது.

சர்ப்ரைஸ் தகவல் என்னவென்றால், விரைவில் சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க இருக்கிறாராம் ஜோதிகா. கடந்த 2019-ல் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்தது சூர்யாவின் 2டி நிறுவனம் தான். படம் பெரியளவில் வரவேற்பு பெற்றதால், 2டி நிறுவனத்தின் விருப்பமான இயக்குநராகவே மாறினார் ஹலிதா.

ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடிப்பது போல கதை ஒன்றை தயார் செய்யுமாறு ஹலிதாவிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் விளையாட்டாக விட்டுவிட்டாராம். இப்போது, இருவருக்குமான கதையை லாக் டவுன் நேரத்தில் தயார் செய்துவிட்டாராம் இயக்குநர். தற்பொழுது இருவருக்குமே கதையைக் கொடுத்து படிக்கவும் சொல்லியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஹலிதாவின் கதை பிடித்துவிட்டால் நிச்சயம் சூர்யா - ஜோதிகா ஜோடியை மீண்டும் திரையில் பார்க்கலாம். தற்பொழுது, ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி சமுத்திரகனி நடிப்பில் ‘ஏலே’ படம் வெளியாக இருப்பது கூடுதல் தகவல்.

சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உயிரிலே கலந்தது', 'காக்க காக்க', 'பேரழகன்', 'மாயாவி' மற்றும் 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்டப் படங்கள் வெளியாகியிருக்கிறது.

-ஆதினி

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 பிப் 2021