மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

முதல்வர் பிரச்சாரம்: வேலூரில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

முதல்வர் பிரச்சாரம்: வேலூரில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

வேலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவரும் நிலையில், துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேர்ணாம்பட்டு பகுதியில் இன்று காலை காரை வேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டி வந்த நபர் பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நபரைப் பிடித்த போலீசார் அவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்தபோது அதிலிருந்து இரண்டு கத்திகள் நீண்ட வாள், விதவிதமான நம்பர் பிளேட்டுகள், துப்பாக்கி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக காரில் ஆயுதங்களுடன் வந்தார்? ஏதேனும் சதி திட்டத்துடன் வந்தாரா உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கும் உளவுப்பிரிவு போலீசாருக்கும் ஆயுதங்களுடன், வந்த நபர் குறித்த தகவல் தெரிவித்து வேண்டுமானால் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று போலீசார் எச்சரித்து இருக்கின்றனர். அதுபோன்று முதல்வர் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அவரது கோர் செல்லுக்கும் தகவல் தெரிவித்து போலீசார் அலர்ட் செய்துள்ளனர்.

-பிரியா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 9 பிப் 2021