மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ சரத்குமார் கேரக்டர் !

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ சரத்குமார் கேரக்டர் !

நடன கலைஞராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்தவர் ராகவா லாரன்ஸ். இவரை இயக்க இருக்கும் இயக்குநருக்கும் இப்படியான ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது, தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ருத்ரன்’.

ராகவாவுக்கு நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் சரத்குமார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், என்ன ரோல் என்பது குறித்த செய்தி வெளியாகவில்லை. புதிய அப்டேட் என்னவென்றால், ருத்ரன் படத்தில் டெரர் வில்லனாக நடிக்கிறார் சரத்குமார்.

வில்லனாக பல படங்களை நடித்திருக்கிறார் சரத்குமார். சமீபமாக அப்படியான ரோல்கள் பெரிதாக நடிக்கவில்லை. நீண்ட நாளுக்குப் பிறகு, சரத்குமாரின் வில்லத்தனத்தைப் பார்க்க இருக்கிறார்கள் ரசிகர்கள். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய ரோலில் சரத்குமார் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ல் முனி படத்தின் தொடர்ச்சியாக வெளியான காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் கலக்கியிருப்பார். 10 வருடங்கள் கழித்து ராகவா லாரன்ஸ் படத்தில் சரத்குமார் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக கடந்த 10 வருடத்தில் பேய் படங்கள் மட்டுமே நடித்து வந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்தப் படமும் அப்படியானதா, இல்லை வேறு கதையா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

ஜிகர்தண்டா, ஆடுகளம் மற்றும் பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் கதிரேசன். தற்பொழுது, மலையாள படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறார். சசிகுமார் நடிக்க விரைவில் தயாரிக்க இருக்கிறார். அதோடு, வெற்றிமாறன் இயக்கும் படமொன்றும் லைன் அப்படில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 9 பிப் 2021