மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

பயிர்க்கடன் தள்ளுபடி - 15 நாளில் ரசீது: முதல்வர்!

பயிர்க்கடன் தள்ளுபடி - 15 நாளில் ரசீது: முதல்வர்!

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி டெல்லிக்குச் சென்ற 18 ஆம் தேதி, மின்னம்பலத்தில் விவசாயக் கடன்கள் ரத்து? முதல்வரின் டெல்லி பயண மெகா திட்டம்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படி, பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 9), அரக்கோணம் கைனூரில் முதல்வர் பழனிசாமி திறந்த வேனிலிருந்தபடி பிரச்சாரம் செய்தார். அப்போது, விவசாயக் கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும் என்றார்.

தற்போது தேர்தல் நெருங்குவதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வருகிறார். ஆனால் விவாதத்துக்கு அழைத்தால் வரமறுக்கிறார் என்றும் முதல்வர் குற்றம்சாட்டினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 9 பிப் 2021