மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

லாரியின் அடியில் சிக்கிய கார்: 5 பேர் பலி!

லாரியின் அடியில் சிக்கிய கார்:  5 பேர் பலி!

மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(85) - இந்திராணி(75) தம்பதியர், தங்களது குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பி உள்ளனர். மகள் மகாலட்சுமி, பேத்தி ஷாந்தினி ஆகியோருடன் கோயிலுக்கு சென்று வந்தனர். மாங்காடு பகுதியைச் சேர்ந்த பால் தினரகரன் என்பவர் காரை இயக்கியுள்ளார்.

இன்று அதிகாலை மதுராந்தகம் அருகே அத்திமனம் பகுதியில் வந்துகொண்டிருக்கும் போது, முன்னாள் சென்ற லாரி மீது வேகமாகச் சென்று கார் மோதியிருக்கிறது. இதில் கார் லாரியின் பின்புறத்தில் அடியில் சிக்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகள் பட்டாளம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், 5 பேரின் உடல்களை மீட்டனர். ஹைட்ராலிக் கட்டர்கள் மற்றும் ஸ்ப்ரெடர்களைப் பயன்படுத்தி லாரியின் அடியில் சிக்கிய காரிலிருந்து உடல்களை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் லாரி ஓட்டுநரான மணப்பாறையைச் சேர்ந்த தங்கசாமி தலைமறைவாகியுள்ளார். லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்தால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

செவ்வாய் 9 பிப் 2021