மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: பருப்புப் புட்டு

கிச்சன் கீர்த்தனா: பருப்புப் புட்டு

எந்தப் பிரச்சினைக்கும் இடம் தராத உணவு என்றால் அது புட்டு ஒன்றுதான். இது எளிதில் ஜீரணமாவதால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும். அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.

என்ன தேவை?

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப்

துருவிய வெல்லம் – ஒரு கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

நெய் - 4 டேபிள்ஸ்பூன்

உடைத்த முந்திரித் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் பருப்பு வகைகளைத் தனித்தனியாகப் போட்டுச் சிவக்க வறுத்து எடுக்கவும். பருப்பு வகைகளைத் தனித்தனியாகத் தண்ணீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர் உதிராக உதிர்த்து எடுக்கவும். அடிகனமான வாணலியில் வெல்லம், தேங்காய்த் துருவல், சிறிதளவு தண்ணீர்விட்டு, பிசுக்குப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கவும். அதனுடன் வேகவைத்து உதிர்த்த பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரியை வறுத்து நெய்யுடன் இதில் சேர்த்துக் கலக்கவும். 5 நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 பிப் 2021