மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 பிப் 2021

சாலையின் தரம்: நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

சாலையின் தரம்: நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

திண்டிவனம் முதல் தாம்பரம் வரையிலான நெடுஞ்சாலையின் தரம் மற்றும் சுங்கக் கட்டணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ஜோசப் சகாயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே பரணூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைக்கான சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் திண்டிவனம் இடையிலான பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகளை முடிக்க, பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர் என்ற தனியார் நிறுவனத்துடன் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுங்கக்கட்டணம் வசூலிக்க வழங்கப்பட்ட உரிமம் காலாவதியாகிவிட்டதால் , பரணூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (பிப்ரவரி 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை தாம்பரம் முதல் திண்டிவனம் வரையுள்ள சாலையின் தரம் குறித்து பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 8 பிப் 2021