மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 பிப் 2021

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கதவு திறந்துள்ளது: மோடி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கதவு திறந்துள்ளது: மோடி

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.

அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய அவர், "வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுமார் 14 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. இதுதொடர்பான விவாதத்தில் 50 எம்பிக்கள் பேசியுள்ளனர். வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இந்த சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறி போகாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாய பிரச்சினைகள் குறித்துப் பேசுபவர்கள் சிறு விவசாயிகளைப் பற்றி மறந்து விடுவதாகக் குறிப்பிட்டார்.

“விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என்பது குறித்து விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவசாயிகளின் நலன் குறித்துத் தொடர்ந்து சிந்தித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசின் கதவுகள் திறந்தே உள்ளன” என்று மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 8 பிப் 2021