மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 பிப் 2021

திறக்கப்படும் சேப்பாக்கம்... இன்று முதல் டிக்கெட் விற்பனை!

திறக்கப்படும் சேப்பாக்கம்... இன்று முதல் டிக்கெட் விற்பனை!

சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில், பிப்ரவரி 13 முதல் நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்ரவரி 8) தொடங்குகிறது.

கொரோனா காரணமாக, பார்வையாளர்கள் அனுமதி இல்லாமல் முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால், இரண்டாவது டெஸ்ட்டுக்கு 50 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டோடு கலந்தாலோசித்து கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி இரண்டாவது டெஸ்ட்டுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது.

http://www.paytm.com மற்றும் http://www.insider.in இணையதளங்கள் வழியாக டிக்கெட்டை புக் செய்யலாம். இந்த முறை நேரடியாக வந்து டிக்கெட் வாங்க கவுன்ட்டர்கள் கிடையாது. ஆனால், ஆன்லைனில் புக் செய்த எண்ணைக்காட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டிக்கெட் பெற வேண்டும்.

இதற்கான கவுன்ட்டர் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விக்டோரியா ஹால் சாலையில் உள்ள 3-ம் எண் பூத்தில் செயல்படும். 11ஆம் தேதி காலை 10 மணி முதல் மேட்ச் நடைபெறும் நாட்கள் வரை இந்த கவுன்ட்டர் திறந்திருக்கும்.

2012ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் போட்டிக்குப் பிறகு சென்னை மாநகராட்சியால் மூடப்பட்ட I,J,K ஸ்டாண்டுகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியா - இங்கிலாந்து போட்டிக்குத் திறக்கப்படுகிறது.

C,D,E லோயர் ஸ்டாண்டுகளுக்கான டிக்கெட் விலை 100 ரூபாயாகவும், D,E அப்பர், F,H,I,J,K லோயர் ஸ்டாண்டுக்கான விலை 150 ரூபாயாகவும், I,J,K அப்பர் ஸ்டாண்டுக்கான விலை 200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயிரங்களில் விற்பனை செய்யப்படும் பெவிலியன் ஸ்டாண்டு உட்பட ஏசி பாக்ஸ் சீட்டுகள் இந்த டெஸ்டுக்கு இல்லை. மொத்தம் 15,000 டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் விற்கப்படும் எனத்தெரிகிறது.

ஸ்டேடியத்திற்குள் நுழையும் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

திங்கள் 8 பிப் 2021