மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

சென்னையில் 6,123 வாக்குச்சாவடி மையங்கள்!

சென்னையில் 6,123 வாக்குச்சாவடி மையங்கள்!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 1,053 இடங்களில் மொத்தம் 6,123 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையை உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பான அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், “இந்தியத் தேர்தல் ஆணையம் 1,000 வாக்காளர்களுக்குமேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துணை வாக்குச்சாவடி அமைக்க அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுகளில் ஏற்கனவே 901 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டிய நிலையில் 2,369 துணை வாக்குச்சாவடிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வாக்குச்சாவடிகள் கூடுமானவரை ஏற்கனவே வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது 1,053 இடங்களில் மொத்தம் 6,123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன” என்றார்.

மேலும், “இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உள்பட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். இது தொடர்பாக வாக்குச்சாவடி மையங்களில் வரைவு பட்டியலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனை மற்றும் கருத்துகளை இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 7 பிப் 2021