மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

இத்தனை கோடிக்கு விலைபோனதா பாரிஸ் ஜெயராஜ்? என்ன காரணம் !

இத்தனை கோடிக்கு விலைபோனதா பாரிஸ் ஜெயராஜ்? என்ன காரணம் !

சந்தானம் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவிட்ட படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இப்படத்தின் தமிழக விலை உரிமை குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘ஏ 1’. இந்தப் படம் சந்தானத்துக்கும், ஜான்சனுக்கும் பெரிய வெற்றையைத் தந்த படம். பெரியளவில் வசூல் வேட்டையும் செய்தது. இந்தக் கூட்டணியில் மீண்டும் உருவாகியிருக்கும் படம் தான் ‘பாரிஸ் ஜெயராஜ்’. கே.குமார் தயாரித்திருக்கும் இப்படமானது வருகிற காதலர் தின சிறப்பாக பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

வடசென்னையின் கானா பாடகராக சந்தானம் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்களும் கூட வெளியாகி பெரியளவில் வரவேற்பை பெற்றுவருகிறது. முழுக்க முழுக்க லொள்ளு சபா வாசனையுடன் இந்தப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகியாக அனைகா நடித்திருக்கிறார்.

பிப்ரவரி 12ஆம் தேதிக்கு எக்கச்சக்க படங்கள் ரிலீஸாக தயாராகிவருகிறது. ஒவ்வொரு படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக திரையரங்குகளைப் பிடிக்கும் போட்டியில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கான தமிழக திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை தயாரிப்பாளர் பிரபுதிலக் 5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சந்தானத்தின் முந்தைய படங்களான டகால்டி மற்றும் பிஸ்கோத் படங்கள் பெரியளவில் வசூலாகவில்லை. இருப்பினும், ஏ1 படத்திற்குக் கிடைத்த ரெஸ்பான்ஸூக்காக தான் நல்ல விலைக்கு இப்படம் விலைபோகியிருக்கிறதாம்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 7 பிப் 2021