மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

சிறந்த இரண்டு படங்கள் வெளியான நாள் இன்று!

சிறந்த இரண்டு படங்கள் வெளியான நாள் இன்று!

மாஸ் கமர்ஷியல் படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மனதுக்கு நெருக்கமான எத்தனையோ படங்களை இந்திய சினிமாவுக்குக் கொடுத்துவருகிறது மலையாளத் திரையுலகம். நேட்டிவிட்டியுடன் எதார்த்த மனிதர்களை திரைக்கதைக்குள் புதைக்கும் அதி அற்புதமான வித்தைகளைக் கொண்டவர்கள் மலையாள இயக்குநர்கள். தமிழில் அப்படியான சினிமாக்கள் அவ்வப்போது தான் வரும். ஆனால், அங்கு அடிக்கடி நடக்கும் என்பதே மிகச் சிறப்பான விஷயம். அப்படி, சென்ற வருடமும் (2020) அதற்கு முந்தைய வருடமும் (2019) இதே நாளில் (பிப்ரவரி 07) இரண்டு படங்கள் வெளியானது.

2019 ஆம் ஆண்டு மது ஸ்ரீ நாராயணன் இயக்கத்தில் பிப்ரவரி 07ஆம் தேதி வெளியான படம் கும்பளாங்கிநைட்ஸ். கயிறு பின்னலும், மீன் பிடித்தலும் தொழிலாக கொண்டிருக்கும் கேரளத்தின் கும்பளாங்கி தீவில் தனித்து விடப்பட்ட வீட்டில் வசிக்கும் முரண்களால் பிணைக்கப்பட்ட நான்கு சகோதரர்கள், அவர்களின் வாழ்வியலும், ஒற்றைப்புள்ளியில் இவர்களை இணைக்கும் அந்த நபரின் போராட்டமுமே கும்பளாங்கி நைட்ஸ்.

வாழ்தல் எல்லோருக்கும் பொதுவானது. அந்த வாழ்க்கையைக் கடத்துவதென்பது அத்தனை எளிதானதாக யாருக்கும் கிடைத்துவிடாது. எந்த இலக்குமில்லாத இந்த நான்கு சகோதரர்கள். யாரும் விரும்பாத இந்தக் குடும்பத்தைக் கொண்டு கதை சொல்லப்பட்டிருக்கும். இந்த களம் தான் ரசிகனை கும்பளாங்கியின் இரவுக்குள் அழைத்துச் செல்கிறது. பிரயோஜனமின்றி வாழும் இந்த நால்வரும், வாழ்க்கை குறித்த பல விஷயங்களை சொல்லித் தருகிறார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம், ‘22 ஃபீமேல் கொட்டயம்’ , ‘மகேஷின்ட பிரதிகாரம்’ உட்பட பல படங்களுக்கு கதை எழுதிய ஷியாம் புஷ்கரனின் எழுத்து தான். அந்த வீடும், எழில்மிகு வீட்டின் ஸ்மோக்லெஸ் கிச்சனும் , யூரோப்பியன் டாய்லெட்டும் , முரண்மிகு மனிதர்களும் நமக்காக காத்திருக்கிறார்கள். தவறவிட்டவர்கள் பர்க்க விரும்பினால் பிரைம் வீடியோக்குள் செல்லலாம். பார்த்தவர்களும் மீண்டும் ஒருமுறை கூட பார்க்கலாம். ஆல் டைமுக்கான ஃபீல் குட் மூவி.

2020ஆம் ஆண்டு இதே நன்னாளில் ப்ரித்விராஜூம் பிஜூமேனனும் இணைந்து நடித்து வெளியான படம் `அய்யப்பனும் கோஷியும்' . ப்ரித்விக்கு முந்தைய படமான டிரைவிங் லைசன்ஸ் படத்தை எழுதிய சச்சு, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கதை இதுதான். மிகச் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் கோஷி குரியன். ஊட்டிக்கு தன்னுடைய டிரைவருடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, அட்டாபாடி வழியாக போகிறார்கள். ஆல்கஹால் தடைசெய்யப்பட்ட பகுதி அது. முழு போதையில், பை நிறைய பாட்டிலுடன் எஸ்.ஐ அய்யப்பனிடம் சிக்குகிறார். கோஷியை அடித்து இழுத்துச் சென்று இரவு முழுக்க காவல் நிலையத்தில் அமர வைக்கிறார். கேஸும் போட்டுவிடுகிறார். ஐயப்பனுக்கு அப்புறமாக தான், கோஷி பெரிய இடத்துப் பையன் என்பது தெரிய வருகிறது. இதன்பிறகு, இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் நடக்கும் ஈகோ மோதல்தான் களம். இந்த மாதிரியான Slow Burn படங்கள் அத்தனை எளிதில் மக்கள் மனதில் நின்றுவிடாது. துல்லியமான திரைக்கதையே படத்தின் வெற்றிக்குக் காரணம்.

இன்றும் கூட, மலையாள சினிமா எழுத்தாளரை நம்புகிறது. உதாரணமாக, கும்பளாங்கி நைட்ஸ் படமானது ஷ்யாம் புஷ்கரன் எனும் எழுத்தாளரிடமிருந்தும், ஜல்லிக்கட்டு திரைப்படமானது எழுத்தாளர் ஹரீஷின் மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை தழுவியும் எடுக்கப்பட்டது போல, வசூலை வாரிக்குவித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குனரான சச்சி, அடிப்படையில் ஒரு திரைக்கதை எழுத்தாளர். அவரை நம்பித்தான் அந்த திரைப்படத்தைத் தொடங்கினார்கள். சினிமா ஒரு தனித்த கலை அல்ல, அது பல நூறு கலைகள் இணைந்த ஒரு தொகுப்பு. எனவே சினிமா எப்போதும் ஒரு கலைஞனிடமிருந்து தொடங்கவேண்டும். எழுத்தாளன் இருப்பதிலேயே எளிமையான கலைஞன். சினிமா அவனிடமிருந்து தொடங்குவது உண்மையிலேயே எளிமையானது, அதே நேரத்தில் ஆரோக்கியமானது!

- ஆதினி

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 பிப் 2021