மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

முதல் டெஸ்ட்: பாலோ-ஆனைத் தவிர்க்குமா இந்தியா?

முதல் டெஸ்ட்: பாலோ-ஆனைத் தவிர்க்குமா இந்தியா?

இந்தியா இன்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னும் 122 ரன்கள் அடித்தால் மட்டுமே பாலோ-ஆனைத் தவிர்க்க முடியும்.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 5) தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (128 ரன்) களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று (பிப்ரவரி 6) ஜோ ரூட்டுடன், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து தொடர்ந்து விளையாடினார். தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 180 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியிருந்தது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களில் 578 ரன்களுக்கு அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிப்லி 87, ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3, இஷாந்த் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷுப்மான் கில் 29 ரன்கள் எடுத்த நிலையிலும் ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா ஒரு பக்கம் சிறப்பாக விளையாடினார். ஆனால் விராட் கோலி 11 ரன்னிலும், ரஹானே 1 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட் இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.

புஜாரா 106 பந்திலும், ரிஷப் பண்ட் 40 பந்திலும் அரைசதம் அடித்தனர். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்தியாவின் ஸ்கோர் 192 ரன்னாக இருக்கும்போது புஜாரா 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 88 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. ஏழாவது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது.

இன்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. அஷ்வின் 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 122 ரன்கள் அடித்தால் பாலோ-ஆனைத் தவிர்க்கும். இங்கிலாந்து அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

ஞாயிறு 7 பிப் 2021