மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

கொரோனா தடுப்பூசி: 3ஆவது இடத்தில் இந்தியா!

கொரோனா தடுப்பூசி: 3ஆவது இடத்தில் இந்தியா!

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு சர்வதேச சாதனையைப் படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இன்று (பிப்ரவரி 7) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதிக பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது எனச் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

சுகாதாரத் துறை அறிவிப்பில், "இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியா இந்த இடத்தைப் பிடித்துள்ளது. 12 மாநிலங்களில் தலா இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 6,73,542 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 1,66,408 மற்றும் புதுச்சேரியில் 3,532 பேர் உட்பட இதுவரை 57,75,322 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

53,04,546 சுகாதார பணியாளர்களுக்கும், 4,70,776 முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,875 முகாம்களில் 3,58,473 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை 1,15,178 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அன்றாடம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.

அதோடு, கடந்த 24 மணி நேரத்தில் 80க்கும் குறைவான உயிரிழப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன. இது கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட தினசரி உயிரிழப்புகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.48 லட்சமாகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.37 சதவீதமாகும். நாட்டில் மொத்தமாக 1,05,22,601 பேர் (97.19%) குணமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 7 பிப் 2021