மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: தேங்காய்ப்பால் பானம்!

ரிலாக்ஸ் டைம்: தேங்காய்ப்பால் பானம்!

‘வாயேன்... ஒரு டீயைப் போட்டுட்டு வருவோம்!’ - இது, சர்வசாதாரணமாக அன்றாடம் நாம் கேட்கும் வாசகம். சோர்வுற்ற தருணங்களில் நாக்கில்பட, நமக்குப் புத்துணர்ச்சி தரும் என நம்பவைக்க ஏதோ ஒரு பானம் நமக்குத் தேவையாக இருக்கிறது. இன்றைய டைட் ஷெட்யூல் வாழ்க்கைமுறைக்கு உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரக்கூடிய பானங்களே தேவை. அதற்கு இந்த தேங்காய்ப்பால் பானம் உதவும். இந்த பானத்தை ரிலாக்ஸ் டைமில் உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

எப்படிச் செய்வது?

ஒரு மூடி தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை இலைகள் 20 அல்லது புதினா இலைகள் 20 அல்லது மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு, ஊறவைத்த பாதாம்பருப்பு ஐந்து மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய வடிகட்டியில் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும். பிறகு தேங்காய் - கறிவேப்பிலை/புதினா/மல்லித்தழை - பாதாம் விழுதை மீண்டும் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சிறப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 7 பிப் 2021