மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

விருப்பப்பட்டால் பள்ளி வரலாம்... அச்சம் தேவையில்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

விருப்பப்பட்டால் பள்ளி வரலாம்... அச்சம் தேவையில்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம், அச்சம் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி 10,12 வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது 9,11 வகுப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 8ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

ஆனால், ஏற்கனவே திறக்கப்பட்ட மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் மேலும் இரு வகுப்புகள் திறக்கப்படுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதற்கு திருப்பூர் பள்ளி திறப்பு விழாவில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டும், அதனால் பள்ளிகள் திறக்கப்படுகிறது,அச்சம் தேவையில்லை விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்றார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்தைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

ஞாயிறு 7 பிப் 2021