மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

விலங்குகளைத் துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் சிறை!

விலங்குகளைத் துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் சிறை!

செல்லப்பிராணிகள், விலங்குகளைத் துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

செல்லப்பிராணிகள், விலங்குகளை அடித்துத் துன்புறுத்துவது, கொல்வது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஒரு விலங்கை அடிப்பது, உதைப்பது, சித்ரவதை செய்வது, பட்டினி போடுவது அதிக சுமை ஏற்றுவது போன்றவிதமான கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.50 வரைதான் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 60 ஆண்டுக்கால விலங்குகளைத் துன்புறுத்தும் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான வரைவு ஒன்றைத் தயாரித்துள்ளது.

அதன்படி இனி விலங்குகளை காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 75,000 ரூபாய் அல்லது விலங்குகளின் மதிப்பில் மூன்று மடங்கு அபராத தொகையாக விதிக்கப்படும். மேலும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கான புதிய சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படுவது குறித்து, டெல்லி மேல்சபையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மீன்வள, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்தார்.

மேலும், ‘விலங்குகளைத் துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துவது அவசியமாகும். கடுமையான அபராதங்களை விதிக்க அரசு அங்கீகரித்துள்ளது. இந்த வரைவு திருத்தத்தில் அபராதம் மற்றும் தண்டனை விதிகள் அடங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பான 316 வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 64 வழக்குகள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 7 பிப் 2021