மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

அரியர் தேர்வு தேதி : அண்ணா பல்கலை அறிவிப்பு!

அரியர் தேர்வு தேதி : அண்ணா பல்கலை அறிவிப்பு!

அரியர் மாணவர்களுக்கான தேர்வு தேதியை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து கல்லூரி பருவத் தேர்வுகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார். இதையடுத்து கட்டணம் செலுத்தி அரியர் எழுதக் காத்திருக்கும் மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஆனால் இதற்குக் கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ, தேர்வு நடத்தாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனிடையே அரியர் தேர்வு நடத்தாமல், தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு எதிராக ராம்குமார் ஆதித்தன் என்பவர் நீதிமன்றத்தில் முறையிட்டார், இதை விசாரித்த நீதிமன்றம், அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது.

அரியர் தேர்வு ரத்து தொடர்பான மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று (பிப்ரவரி 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘ஆன்லைன் தேர்வு அல்லது நேரடி தேர்வு நடத்தியது தொடர்பாக, பல்கலைக் கழகங்களிடமிருந்து இருந்து விபரங்களைச் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபரங்களுக்கு அண்ணா பல்கலையின் www.annauniv.edu அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 6 பிப் 2021