ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு தக்காளி தோசை!

இன்று சனிக்கிழமைதானே... காலை உணவைப் பொறுமையாகச் சாப்பிடலாமே என்று நினைப்பவர்கள் அநேகர். அப்படிப்பட்டவர்கள் ரிலாக்ஸ் டைமில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான மொறுமொறுப்பான இந்த கேழ்வரகு தக்காளி தோசை செய்து சுவைக்கலாம்.
எப்படிச் செய்வது?
மூன்று தக்காளி, ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் 250 கிராம் கேழ்வரகு மாவு, நறுக்கிய தக்காளி, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். 100 கிராம் இட்லி மாவில் அரைத்துவைத்த கலவையைத் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். இதில் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெய்விட்டு அதில் மாவை ஊற்றி பொன்னிறமாக வரும் வேளையில் தோசையைத் திருப்பி எடுத்தால் சுவையான மொறுமொறு கேழ்வரகு தக்காளி தோசை தயார்.
சிறப்பு