மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

10% இடஒதுக்கீடு: பின்பற்றும் தமிழக பல்கலைக்கழகங்கள்!

10% இடஒதுக்கீடு: பின்பற்றும் தமிழக பல்கலைக்கழகங்கள்!

தமிழக பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு நிதி உதவி பெறும் பயோடெக்னாலஜி துறையில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் 69% இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மத்திய அரசு வழங்கும் 49.5 % இடஒதுக்கீட்டை பின்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயோடெக்னாலஜி பட்டமேற்படிப்புக்கான சேர்க்கை டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் சிஇஇபி (CEEB- combined entrance exam for biotechnology) என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை மத்திய அரசின் கீழ் இயங்கும் RCB (Regional centre for biotechnology) என்ற நிறுவனம் நுழைவுத் தேர்வை GAT-B (Graduate Apptitute Test in Biotechnology) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடத்தியது.இந்த நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கப்படும் பயோடெக்னாலஜி மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கையை நடத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாநியக் குழு மாநில கல்வி நிறுவனங்களை அந்தந்த மாநில இடஒதுக்கீடு முறையை பின்பற்ற சொல்லியிருக்கும் நிலையில்,மேற்கண்ட பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் இடஒதுக்கீடு பின்பற்றி சேர்க்கையை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்திய பொதுப் பட்டியலில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு (EWS) 10% இடஒதுக்கீடு கொண்டு வர மாட்டோம் என அரசு அறிவித்திருந்த நிலையில்,தமிழக பல்கலைக்கழகங்களில் மத்திய அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு மாநில அரசின் இடஒதுக்கீடு பின்பற்ற சொல்லியிருக்கும் நிலையில்,பல்கலைக்கழகங்கள் எந்த விதிமுறைகளைப் பின்பற்றி மத்திய அரசின் இடஒதுக்கீடு கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தினார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து 4 பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் இடஒதுக்கீடுக்கு எதிராக சேர்க்கையை நடத்தியுள்ளது.இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய மாநில அரசுக்கு இடையே ஏற்பட்ட இடஒதுக்கீடு பிரச்சனையால் அங்கு இத்துறைக்கான சேர்க்கையே ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்.ஆனால் இந்த 4 பல்கலைக்கழகங்களை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் சமூகநீதி மாநில உரிமைக்குப் போராட்டமா? மற்ற பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 6 பிப் 2021