மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: டிபன் சாம்பார்

கிச்சன் கீர்த்தனா: டிபன் சாம்பார்

நாதத்துக்கு தாளம் போல, இட்லிக்கு சாம்பார். பலவித சைடிஷ்கள் இருந்தாலும் சாம்பார் இல்லாமல் இட்லி எடுபடாது. நம் தென்னிந்திய உணவிலும் சரி, சமையலிலும் சரி... சாம்பாருக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, சூடான இட்லிக்கு இந்த சுவையான டிபன் சாம்பார் போல.

என்ன தேவை?

துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப்

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்)

கீறிய பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

தோலுரித்த சின்ன வெங்காயம் - 10

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 6 பிப் 2021