மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

கறுப்புப்பட்டை அணிந்து விளையாட இருக்கும் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?

கறுப்புப்பட்டை அணிந்து விளையாட இருக்கும் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?

இன்று நடக்கும் சென்னை டெஸ்ட்டில் கறுப்புப்பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாட இருக்கிறார்கள். ஏன், எதற்காக?

2020 கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரம்... உலகமே வெறிச்சோடி மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தபோது 100 வயது டாம் மூர் துணிச்சலாக வெளியே இறங்கினார். இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் உயிரை பணயம் வைத்து, களத்தில் போராடிய மருத்துவ வீரர்களுக்காக நிதி திரட்ட தீர்மானித்தார்.

அறுபது வயது தாண்டினாலே மூட்டுவலி, முட்டிவலி என மூலையில் முடங்கிப்போகும் மக்கள் மத்தியில், வயதானாலும் அந்த துணிச்சலும் மிடுக்கும் கொஞ்சமும் குறையாமல் களத்தில் இறங்கினார் கேப்டன் சர் டாம் மூர்.

“இது ஒரு யுத்த காலத்தை போன்ற சூழல். இதில் முதல் களத்தில் நின்று போரிடும் வீரர்களான மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களுக்கும், பின் வரிசையில் நிற்கும் நாம் தகுந்த ஆயுதங்களை வழங்க வேண்டும். அதற்கான எனது முயற்சியாக 1,000 பவுண்ட் நிதி திரட்டும் பொருட்டு, எனது தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்கப் போகிறேன்” என செம துணிச்சலோடு அறிவித்தார்.

முதலில் அக்கம்பக்கத்து வீட்டினரின் கவனத்தை ஈர்த்த இவரது நடை, பின் படிப்படியாக இங்கிலாந்து மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகையும் கவனிக்கவைத்தது. நூறு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமானது. 1000 பவுண்ட் நிதி திரட்ட முடிவெடுத்து நடந்தவருக்கு 39 மில்லியன் பவுண்ட், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 387 கோடி ரூபாய் நிதி திரண்டது. வயதில் சதம் அடித்த இந்த தாத்தாவின் கோரிக்கைக்காக பணம் உலகம் முழுவதும் இருந்தும் வந்து குவிந்தது.

இந்த நிலையில், ஏற்கெனவே கேன்சர் உட்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர், சென்ற வாரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இங்கிலாந்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா தடுப்பூசி போட முடியவில்லை. மூச்சு திணறலால் அவதிப்பட்ட கேப்டன் டாம் மூர், மூன்று நாட்களுக்கு முன்னர் (02-02-2021) உயிரிழந்தார்.

கேப்டன் சர் டாம் மூரின் நினைவாக இன்று சென்னை டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள்.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வெள்ளி 5 பிப் 2021