மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

ஜெகமே தந்திரம் ஓடிடி-க்குச் செல்ல உண்மைக் காரணம் !

ஜெகமே தந்திரம் ஓடிடி-க்குச் செல்ல உண்மைக் காரணம் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த பரபரப்பு சில நாட்களாக நிலவி வருகிறது.

சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவில் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் உறுதியாக திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சொல்லிவந்த நிலையில், திடீரென ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, சமீபத்தில் தனுஷ் ஒரு ட்விட் ஒன்றையும் போட்டார். அதில், “ தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், என் ரசிகர்களைப் போலவே நானும் ‘ஜகமே தந்திரம்’ தியேட்டரில் வெளியாகும் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

ஏற்கெனவே விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படமானது திரையரங்கில் வெளியான போது, ஆதரவு அளித்த நடிகர்களில் இவரும் ஒருவர். அப்படி இருக்கையில், தன்னுடைய படம் ஓடிடிக்கு செல்வதை விரும்புவாரா என்ற கேள்வி எழுகிறது.

ஜெகமே தந்திரம் படமானது ஓடிடிக்குச் செல்வதை தனுஷ் விரும்பவில்லை என்றே தெரிகிறது. தொடர்ச்சியாக, தயாரிப்பாளரிடம் திரையரங்க ரிலீஸூக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் தனுஷ். அதன் வெளிப்பாடு தான், ட்விட்டரில் தனுஷை அன் ஃபாலோ செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.

தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தால் வேறு ஒரு புதிய தகவலைச் சொல்கிறார்கள். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து, ரிலையன்ஸூடன் தொடர்ச்சியாகப் படங்களைத் தயாரிக்க இருந்ததாம். இப்போது, பொருளாதாரச் சிக்கலால் அந்த ஒப்பந்தம் நடக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால், பெரிய தொகை சசிகாந்துக்கு எதிர்காலத்தில் நட்டமாகும் என்பதால், உடனடியாக ஓடிடிக்கு பெரும் விலைக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். அதன்படி தான், ஓடிடிக்கு வந்திருக்கிறது ஜெகமே தந்திரம்.

ஜெகமே தந்திரம் போனால் என்ன, தனுஷின் கர்ணன் தியேட்டரில் தான் வருகிறது என்று தனுஸூம், ரசிகர்களும் ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 5 பிப் 2021