மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

‘சக்ரா வெளியாகணும்னா இத பண்ணுங்க’ விஷாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

‘சக்ரா வெளியாகணும்னா இத பண்ணுங்க’ விஷாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ஆக்‌ஷன். கடந்த 2019-ல் இந்தப் படம் வெளியானது. பெரும்பொருட் செலவில் உருவாகி, தோல்விப் படமானது. இந்தப் படத்தினால் பெரிதளவில் நஷ்டத்தினைச் சந்தித்தார் தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்.

இந்த நஷ்டத்திற்கு விஷாலே பொறுப்பேற்றார். அதன்படி, ரவீந்திரனுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் தொகையைத் திருப்பித் தருவதாக விஷால் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்த தொகையை இன்னும் விஷால் திருப்பித் தரவில்லை என்றே தெரிகிறது. அதோடு, நஷ்டத்தொகைக்கு ஈடாக மீண்டும் ஒரு படம் நடிக்க இருந்தார் விஷால். அந்தப் படத்திற்காக சக்ரா இயக்குநர் ஆனந்தன் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு கதையைச் சொல்லியிருந்தார். அந்தக் கதைதான், இப்போது சக்ரா படமாக விஷால் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. இந்த காரணத்தினால் தான், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார் ரவீந்திரன். சக்ரா படத்தை தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அதன்படி, சக்ரா பட ரிலீஸூக்கு முன்பாக 4 கோடி ரூபாய்க்கான வங்கி உத்திரவாதத்தை செலுத்தி சக்ரா படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி அளித்து உத்திரவிட்டார் நீதிபதி. அதோடு, படம் வெளியாகி இரண்டு வாரத்துக்குள் மீதித் தொகைக்கான உத்திரவாத தாக்கலுக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண நடுவர் ஒருவரை நியமித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஷாலின் சக்ரா திரைப்படத்தினை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருக்கிறார். விஷாலுக்கு நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடித்துள்ளார்கள். ஆர்மி அதிகாரியாக விஷால் இப்படத்தில் நடித்திருக்கிறார். வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி படமானது வெளியாக இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சிக்கல் தீர்ந்தால் மட்டுமே சக்ரா வரும். இல்லையென்றால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 5 பிப் 2021