மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இன்று (பிப்ரவரி 5) சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்துவதற்கான கோப்புகள் தற்போது முதல்வர் பழனிசாமியிடம் இருப்பதாகவும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்தது. இந்த வயது வரம்பு, கொரோனா காலத்தில், கடந்த (2020) ஆண்டு 59ஆக உயர்த்தப்பட்டது. இந்த (2021) ஆண்டு இது 60 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், "தமிழக அரசின் கஜானா காலியாக உள்ளது. அதை மறைப்பதற்காக இப்படியான ஓர் அவசரமான அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 30,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுடைய ஓய்வூதியத் தொகை திருப்பித் தர வேண்டும் என்பதற்காக இப்படியான முடிவை அறிவித்துள்ளது" என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இந்த நிலையில், “கொரோனாவின் கோர தாண்டவத்தில் தனியார் நிறுவனங்களில் வேலையிழப்புகள் கடுமையாக உள்ளன. இந்தச் சூழலில் அரசுத் துறைகளில் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டால் வேலையில்லாதவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள்” என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

வெள்ளி 5 பிப் 2021