மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 பிப் 2021

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும்: பின்வாங்காத கிரேட்டா

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும்: பின்வாங்காத கிரேட்டா

டெல்லியில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயதான கிரேட்டா தென்பெர்க் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. முதன்முதலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச பாப் பாடகி ரிஹானா தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்த சிஎன்என் செய்தியினை பகிர்ந்து, ‘நாம் இதைப்பற்றி ஏன் பேசவில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதுபோன்று சுவீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தென்பெர்க் , ’அனைவரும் இந்திய விவசாயிகளுடன் ஆதரவாக நிற்போம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

சர்வதேச பிரபலங்கள் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டினர் பார்வையாளராக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்கக் கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். அவர்கள் இந்தியாவிற்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கிரேட்டா தென்பெர்க் மீது , குற்றவியல் சதி மற்றும் பகைமையை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பாக இன்று மாலை கிரேட்டா தென்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போதும் நான் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். எந்தவிதமான வெறுப்பு, மனித உரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது வன்முறையால் இதனை மாற்ற முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத கிரேட்டாவுக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதனால் #GretaThunberg என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

-பிரியா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 4 பிப் 2021