மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: பாலக் பக்கோடா!

ரிலாக்ஸ் டைம்: பாலக் பக்கோடா!

விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவது பக்கோடா. ஒரு சில பொருட்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய இந்த பாலக் பக்கோடாவை ரிலாக்ஸ் டைமில் செய்துகொடுத்து குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்யலாம்.

எப்படிச் செய்வது

ஒரு கப் பாலக்கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் ஒன்றை சிப்ஸ் சீவும் பலகையில் மெலிதாக சீவிக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய்யை உருக்கிக்கொள்ளவும்.

ஒரு கப் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு தலா ஒரு டீஸ்பூன், நான்கு நறுக்கிய பச்சை மிளகாய், சுத்தம் செய்த பாலக் கீரை, சீவிய வெங்காயம், உருக்கிய நெய் சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, அதில் பிசிறிய மாவை பக்கோடாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு

பாலக்கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் பக்கோடாவுக்குத் தண்ணீர் தேவைப்படாது, பாலக்கீரையின் நீரே போதுமானது.

சிறப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 4 பிப் 2021