மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: எண்ணெய் கத்திரிக்காய்க் குழம்பு

கிச்சன் கீர்த்தனா: எண்ணெய் கத்திரிக்காய்க் குழம்பு

ஒவ்வொரு வகை குழம்புக்கும் ஒவ்வொரு வகை செய்முறை பின்பற்றப்படுகிறது. எந்த காய்கறி அல்லது வத்தலை சேர்க்கிறோமோ அதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக வெண்டைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்தால் வெண்டைக்காய் குழம்பு எனவும், பூண்டு பயன்படுத்தினால் பூண்டு குழம்பு எனவும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த எண்ணெய் கத்திரிக்காய்க் குழம்பு.

என்ன தேவை?

குட்டி கத்திரிக்காய் - 10 (நான்காகப் பிளந்து, உப்பு கலந்த நீரில் கழுவி எடுக்கவும்)

தோலுரித்த சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 10 பல்

தக்காளி - 3 (விழுதாக அரைக்கவும்)

புளி (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்) - சிறிதளவு

சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

எண்ணெய் உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

சீரகம் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி விழுது, சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, இரண்டு கப் தண்ணீர், கத்திரிக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கத்திரிக்காய் நன்றாக வெந்த பின் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கவும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 4 பிப் 2021