மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 பிப் 2021

டெல்லி: முள்வேலி தடுப்புகளை அமைத்துள்ள போலீஸ்!

டெல்லி: முள்வேலி தடுப்புகளை அமைத்துள்ள போலீஸ்!

காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமென்ட் - கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதுவரை மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். ஆனால் இந்தப் பேரணி கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து, போராட்டம் வன்முறையாக மாறியதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டும் விவசாயிகள், போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் உள்ளனர்.

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தண்ணீர், மின் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம், இணைய சேவை முடக்கம் என நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக முள்வேலி அமைத்து டெல்லி எல்லைகளை மூடி வருகிறது.

காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், கான்கிரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. நடந்து வருவோரைத் தடுக்க சாலைகளில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் எல்லைகளில் தற்காலிக தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணியிலும் காவல் துறை ஈடுபட்டுள்ளது

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 3 பிப் 2021