மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 பிப் 2021

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு!

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நேற்று (பிப்ரவரி 2) மாலை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறையத்தொடங்கியதையடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

அதில், “சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ஆம் தேதி பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி ஜூன் 7ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ஆம்தேதி பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அச்சமும் பதற்றமும் இன்றி எதிர்கொள்ள வேண்டும் எனவும், பொதுத் தேர்வுகளை நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளது எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 3 பிப் 2021