மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 பிப் 2021

HBD சிம்பு ; லக்கி நாயகிகளும், சிம்புவின் பெஸ்ட் படங்களும்!

HBD சிம்பு ; லக்கி நாயகிகளும், சிம்புவின் பெஸ்ட் படங்களும்!

தந்தை இயக்குநர் எனும் துருப்புச் சீட்டு இருந்ததால், இளம் வயதிலேயே சினிமாவுக்குள் லிட்டில் சூப்பர் ஸ்டாராக நுழைந்தார் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக 12 படங்கள் நடித்தார். அதன்பிறகு, டி.ராஜேந்தர் இயக்கிய சொன்னால் தான் காதலா, ரிச்சர்ட் நடித்த காதல் வைரஸ் படங்களில் ஹீரோவாவதற்கு முன்பே சிறப்புத் தோற்றத்தில் வந்தார் சிம்பு. இப்படியாக துவங்கிய சிம்புவின் சினிமாவில் நினைவுக்கூறத்தக்க சில படங்களும் இருக்கிறது. சிம்புவின் பிறந்த நாளான இன்று, சிம்புவின் படங்களை சின்னதாக அலசிவிடலாம்.

சிம்பு ஹீரோவாக அறிமுகமான முதல் படம் காதல் அழிவதில்லை. இருப்பினும், சிம்புவுக்கு நினைவுக் கூறத்தக்க அறிமுகமென்றால் கோவில் படம்தான். ஹரி இயக்கத்தில் வெளியான இப்படம் கமர்ஷியலாக சிம்புவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தைனைப் பெற்றுத் தந்தது. சிம்பு - சோனியா அகர்வால் காமினேஷனில் காதலும், வடிவேலு - சிம்பு காம்போவில் காமெடியும் அதகளமாக இருக்கும்.

கோவில் படத்துக்குப் பிறகு, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம் மன்மதன். சிம்புவே இயக்கி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மதன்குமார், மதன்ராஜ் என இரண்டு சிம்புவும் மன்மதனாக செய்யும் ஆக்‌ஷன்களே களம். சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். ஜோதிகாவுடன் சிம்பு இரண்டு படங்கள் நடித்தார். மன்மதன் மற்றும் சரவணா என இரண்டிலுமே ரொமான்ஸ் நன்றாக செட் ஆகியிருக்கும். ரசிகர்களுக்கும் சிம்பு - ஜோதிகா ஜோடி ஃபேவரைட் ஒன்றாக அப்போது மாறியது. அந்த நட்பு, ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடித்தது வரை தொடர்ந்தது.

சிம்புவுடன் நயன்தாரா நடித்து வெளியான படம் வல்லவன். இந்தப் படம் வெளியான காலக்கட்டத்தில் இளம் ரசிகர்களின் ஃபேவரைட் நாயகனாகவே மாறியிருந்தார் சிம்பு. வயது மூத்த பெண்ணைக் காதலிக்கும் ஹீரோ என்பதே களம். சிம்பு படிக்கும் கல்லூரியிலேயே பேராசிரியராக வருகிறார் நயன்தாரா. பார்த்ததும் காதலில் விழுகிறார் சிம்பு. சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் சிறந்த காம்போ என்றால் சிம்பு - நயன்தாரா தான். இருவரும் காதலித்து பிரேக் அப் செய்துகொண்ட பிறகும் கூட, எந்த வித ஈகோவும் இல்லாமல் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்தப் படமும் இருவருக்குமே நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இப்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கும் சிம்பு - நயன்தாரா மீண்டும் ஒரு படம் இணைந்து நடிக்கப் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதும் கூடுதல் தகவல்.

சிம்பு என்றதுமே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் படம் விடிவி. இயக்குநர் கெளதம் மேனனின் சினிமா வாழ்க்கையிலும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்ததும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் தான். சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் லைஃப் டைம் படம் என்றே சொல்லலாம். ஜெர்ஸியும் கார்த்தியும் ரசிகர்களின் உள்ளத்தில் எப்போதுமே நீங்கா இடம் பிடித்துவிட்டார்கள். இதே ஜோடிதான் 2003ல் அலை எனும் படத்தில் நடித்திருப்பார்கள். அந்தப் படத்தை நினைவிலேயே கொள்ள வேண்டாம், தவிர்த்துவிடலாம். சிம்பு - த்ரிஷா என்றால் விடிவி மட்டும் தான். இந்த லாக்டவுனில் ஐபோனிலேயே எடுத்த ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படமும் பெரிய அளவில் டிரெண்டானது. விடிவி 2 படம் நிச்சயம் வரும் எனவும் கெளதம் மேனன் நம்பிக்கை அளித்திருக்கிறார், பார்க்கலாம்.

சிம்புவின் சினிமாவில் வித்தியாசமான ஒரு முயற்சி வானம். சென்னையில் சங்கமமாகும் ஐந்து கதைகள். ஆந்தாலஜி மாதிரியான ஒரு களம். படமும் நன்றாக வந்திருக்கும். குறிப்பாக, சிம்பு க்ளைமேக்ஸில் இறந்துவிடுவார். பெரிய ஹீரோவாக கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்தில் இறப்பது போன்ற கட்சிகளை ஹீரோக்கள் விரும்ப மாட்டார்கள்.. ஆனால், சிம்பு செய்திருப்பார். படத்தில் பரத், அனுஷ்கா, சரண்யா, பிரகாஷ்ராஜ் கதைகளுக்கும் நிறைய இடம் கொடுத்திருப்பார். சிம்புவுக்கு வானம் மிக முக்கிய படம். இப்படம் மாதிரியே, மல்டி ஹீரோ சப்ஜெக்டில் சிம்பு நடித்த செக்கச் சிவந்த வானம் படத்தையும் குறிப்பிடலாம். அரவிந்த்சாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகிய மூவருடன் போட்டிப் போட்டு நடித்திருப்பார் சிம்பு.

சிம்பு - ஜோதிகா, சிம்பு - நயன்தாரா, சிம்பு - த்ரிஷா வரிசையில் குறிப்பிடத்தக்க காம்போ என்றால் சிம்பு - ஹன்சிகா. இவர்கள் இணைந்து நடித்த படம் வாலு. இந்தப் படத்தின் போது இருவருமே காதலில் விழுந்தார்கள். பிறகு, சில காரணத்தால் இருவருமே பிரிந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் தான் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்த வேட்டை மன்னன் படம் டிராப் ஆனது. அந்தப் படத்தின் இயக்குநர் தான் இப்போது, விஜய் 65 இயக்கும் நெல்சன். இப்போது, மீண்டும் சிம்புவும் - ஹன்சிகாவும் இணைந்து நடிக்கும் மஹா படத்திற்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 3 பிப் 2021