மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 பிப் 2021

ரிலாக்ஸ் டைம் : பைனாப்பிள் பச்சடி

ரிலாக்ஸ் டைம் : பைனாப்பிள் பச்சடி

தயிரைப் பிரதானமாகக் கொண்டு வெங்காயப் பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி செய்வது போல அன்னாசிப்பழப் பச்சடியும் செய்யலாம். இது உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும்; உடனடி புத்துணர்ச்சித் தரும்..

எப்படிச் செய்வது?

அன்னாசிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். இரண்டு காய்ந்த மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு இரண்டு டீஸ்பூன் ,வெந்தயம் அரை டீஸ்பூன் சேர்த்து தாளித்த பிறகு நறுக்கிய அன்னாசிப்பழம், தேவையான அளவு கறிவேப்பிலை, நறுக்கிய காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், அரை கப் தேங்காய்த்துருவல், தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியில் ஒரு கப் தயிர் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சிறப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 3 பிப் 2021