மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 பிப் 2021

ஹீரோவாக காமெடியன் செந்தில் நடிக்கும் படம் !

ஹீரோவாக காமெடியன் செந்தில் நடிக்கும் படம் !

நடிகர் சூர்யா நடிப்பில் 2018-ல் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, நல்ல ரோலில் நடித்திருந்தார் காமெடி நடிகர் செந்தில். தற்பொழுது நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறார்.

துவக்கமாக, செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒன்று தற்பொழுது துவங்கியுள்ளது. இப்படத்தை சுரேஷ் சங்கையா இயக்குகிறார். விதார்த், ரவீனா ரவி நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. முதல் படத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றவர்.

இவரின் இரண்டாவது படத்துக்கு ‘சத்ய சோதனை’ என டைட்டில் வைக்கப்பட்டது. இப்படத்தில் ஹீரோவாக பிரேம்ஜி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸூக்குத் தயாராகிவருகிறது. இந்நிலையில், சங்கையாவின் மூன்றாவது படத்தில் ஹீரோ செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்துப் பின்புலத்தில் இப்படம் உருவாக இருக்காம். முழுக்க முழுக்க நக்கலும் நையாண்டியுமாக களம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நையாண்டிக்கு பெயர் போனவர் செந்தில். இவரின் கரகாட்டக்காரன் காமெடியெல்லாம் செந்திலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. காமெடி உலகில் காமிக் ஐகானாக இருப்பவர் செந்தில். இதுவரை 250க்கும் மேல் படங்கள் நடித்திருப்பார். இந்நிலையில், சங்கையா படமானது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 2 பிப் 2021