மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 பிப் 2021

பட்ஜெட்டில் எட்டு வழிச் சாலை: சேலத்தில் போராட்டம்!

பட்ஜெட்டில் எட்டு வழிச் சாலை: சேலத்தில் போராட்டம்!

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உடனடியாக சேலத்தில் எதிரொலித்துள்ளது.

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவியோடு தமிழகத்தின் எடப்பாடி அரசு செயல்படுத்த முனைந்ததை அடுத்து கடுமையான போராட்டங்கள் வெடித்தன. சேலம் முதல் சென்னை வரை பல்வேறு இயற்கை வளங்களை அழித்து இந்த சாலைகள் செயல்படுத்த இருப்பதாக விவசாயிகள் கொந்தளித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அண்மையில், “புதிய அறிவிப்பாணையுடன் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று எட்டு வழிச் சாலை திட்டத்தை தொடங்கலாம்” என்று நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், நேற்று மத்திய பட்ஜெட்டில், “எட்டு வழிச் சாலைத் திட்ட பணிகள் தொடங்க ஒப்பந்தம் வரும் நிதியாண்டில் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்” என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அடுத்த ராமலிங்கபுரம் பகுதியில் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயி குப்புசாமி என்பவரின் நிலத்தில் விவசாயிகள் திரண்டனர். மத்திய, மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பொறியை மையமாகக் கொண்டு விவசாயிகள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பாத - விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கின்ற - “சென்னை - சேலம்” பசுமை வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்திருப்பது, தேர்தல் ஆண்டில் கூட - தமிழக விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராகவே நடப்போம் என்ற மத்திய பாஜக அரசின் பிடிவாதமான, முதலாளிகளுக்குச் சாதகமான, மனநிலையைப் பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

செவ்வாய் 2 பிப் 2021