மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 பிப் 2021

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு!

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 ஊதியத்திலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 1) அறிவித்துள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 ஊதியத்திலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வின் மூலம் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் பகுதி நேர ஆசிரியர்கள் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கான பதிவேடு தலைமை ஆசிரியரால் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். வருகைப் பதிவேட்டின்படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஊதியம் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 2 பிப் 2021