மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் புத்தகக்காட்சி!

பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் புத்தகக்காட்சி!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி புத்தகக்காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

புத்தாண்டு, பொங்கல் நேரத்தில் நடத்தப்படும் இந்தப் புத்தகத் திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து புத்தக ரசிகர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 43ஆவது புத்தகக்காட்சிக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்து சில கோடி ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடக்க இருந்த 44ஆவது புத்தகக்காட்சியை நடத்த இயலவில்லை.

இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், புத்தகக்காட்சியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பபாசி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு அதை ஏற்று கடந்த 22ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதையடுத்து 44ஆவது புத்தகக்காட்சியை நடத்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி புத்தகக்காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை புத்தகக்காட்சி நடைபெறும். காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை வாசகர்கள் புத்தகக்காட்சிக்குச் சென்று புத்தகங்களைப் பார்வையிட்டு வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து புத்தகக்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் புத்தகக்காட்சிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகக்காட்சிக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க நுழைவுக் கட்டணத்தை இணையதளம் வழியாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகக்காட்சிக்குள் செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழிகள் அமைக்கப்படும். கார்களை நிறுத்தவும் விரிவான ஏற்பாடு செய்யப்படும். வழக்கம் போல சுமார் 500 அரங்குகள் புத்தகக்காட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு அரங்கிலும் மூன்று வாசகர்கள் மட்டுமே சென்று புத்தகங்களைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தளர்வுகள் வந்துவிட்டதால் வாசகர்கள் அதிகளவு வர வாய்ப்புள்ளது. புத்தகக்காட்சி ஒரு மாதம் தாமதமாக நடைபெற்றாலும் புத்தகக்காட்சிக்கு மக்கள் மத்தியில் வழக்கமான வரவேற்பும், ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

திங்கள் 1 பிப் 2021