மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

அண்ணா பல்கலைக்கழக சேர்க்கை ரத்து...வழக்கு தொடர்ந்த மாணவர்கள்...

அண்ணா பல்கலைக்கழக சேர்க்கை ரத்து...வழக்கு தொடர்ந்த மாணவர்கள்...

அண்ணா பல்கலைக்கழகம் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியூடேஷ்னல் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழக முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மத்திய மாநில அரசுகளில் இட ஒதுக்கீடு பிரச்சனையால் சேர்க்கை ரத்து செய்வதாக அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்.

மத்திய அரசு தேர்வு நடத்தும் பொறுப்பை மத்திய அரசின் கீழ் இயங்கும் RCB (Regional centre for biotechnology) என்ற நிறுவனத்துக்கும்,சேர்க்கையை அந்த மாநில கல்லூரி நிறுவனம் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்தப் பட்டமேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு GAT-B நடந்து முடிவுகள் அறிவித்த பிறகும்,அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை நடைப்பெறாமல் இருந்தது.

மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீடு அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துமாறு கோரிய நிலையில்,அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இடஒதுக்கீட்டில் தான் மாணவர் சேர்க்கை நடைப்பெறுமென தமிழக அரசு தெரிவித்தது.இந்தக் குழப்பத்தால் மாணவர் சேர்க்கை நடைப்பெறாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் 29.01.2021 அன்று இந்த மேற்படிப்புக்கான சேர்க்கை ரத்து செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.மத்திய-மாநில அரசுகளின் இடஒதுக்கீடு பிரச்சனையால், அண்ணா பல்கலைக்கழகம் சேர்க்கையை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.இதை எதிர்த்து மாணர்கள் தரப்பில் சென்னை உயர்நீதீமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர்களில் ஒருவரான சரவணன் கூறுகையில்,மாநில அரசு கோரும் 69% இடஒதுக்கீடை ஏற்றுக்கொள்ளாமல் போனால் 9 மாணவர்களே பாதிக்கப்படுவர்,ஆனால் தமிழக அரசின் இந்த நிலைப்பாடு மற்ற 36 மாணவர்கள் கல்வியைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நடக்கும் இடஒதுக்கீடு பிரச்சனையில் மாணவர்கள் நலனைக் காப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்.இதனால் அண்ணா பல்கலைக்கழகம் சேர்க்கை ரத்து என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

திங்கள் 1 பிப் 2021