மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

கொல்லப்படும் விலங்குகள்: வனத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு!

கொல்லப்படும் விலங்குகள்: வனத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு!

தமிழக காடுகளில் வனவிலங்குகளை கொன்று உடலைக் கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய வழக்கில் மத்திய வனத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் 3305 கிலோமீட்டர் காடுகள் உள்ளன. இங்கு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது தமிழகத்தில் உள்ள காடுகளில் வாழும் விலங்குகள், பல், தந்தம், ஓடுகள் உள்ளிட்டவற்றுக்குக் கொன்று கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

இதற்குச் சட்டங்கள் கடுமையாக இல்லாததே காரணம். 2009ஆம் ஆண்டு முதல் 2013 வரை, 25 கடத்தல்காரர்களிடம் இருந்து 5 ஆயிரம் கிலோ எறும்புத் தின்னிகளின் ஓடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எறும்புத் தின்னிகள் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினங்களின் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

மருத்துவ பயன்பாட்டிற்காக இந்த ஓடுகள் சீனா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. விலங்குகள் போன்று காடுகளிலுள்ள அரியவகை மரங்களான சந்தனம் தேக்கு போன்றவையும் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. காடுகளில் கஞ்சா செடிகள் வளர்த்துக் கடத்தப்படுவதும் சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்புத்தின்னி ஓடுகள், 6 சிறுத்தை நகங்கள், 6 கிலோ எடையுள்ள இரண்டு யானையின் தந்தங்கள் வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே காடுகளில் விலங்குகள் கொல்லப்படுவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குநர், தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

திங்கள் 1 பிப் 2021