மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் என்ன?

மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் நெடுஞ்சாலை அமைக்கவும்  மற்றும் மெட்ரொ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.  சரியாக காலை 11 மணிக்கு உரையைத் தொடங்கிய அவர் 12.50 மணிக்கு முடித்தார். ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் உரையை வாசித்தார்.  கடந்த ஆண்டு பிப்ரவரி 2020  பட்ஜெட் உரையை  நிர்மலா சீதாராமன், 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் குறைவாகவே பேசியிருக்கிறார்.

இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து அறிவித்த அவர்,  “தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.  சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும். தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 1 பிப் 2021