மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: தண்ணிக்குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: தண்ணிக்குழம்பு!

நம் அன்றாட உணவில் கட்டாயம் இடம்பெறுவது குழம்பு. ‘தினமும் ஒரே மாதிரி குழம்பா...’ என்று உதடு பிதுக்குபவர்கள்கூட, சுவையும் மணமும் அதில் தூக்கலாக இருந்தால்... ‘இன்னும் கொஞ்சம் ஊற்று’ என்று அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகிவிடுவார்கள். அதற்கு இந்த செட்டிநாடு ஸ்டைல் தண்ணிக்குழம்பு உதவும்.

என்ன தேவை?

துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் துவரம்பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கலவை, தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (ரசம் போல தண்ணீர் அதிகமாகச் சேர்த்து இளங்குழம்பாகத் தயாரிக்கவும்).

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

திங்கள் 1 பிப் 2021