மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

வயிற்றில் மாத்திரை வடிவில் கடத்தப்பட்ட ரூ.2.17 கோடி தங்கம் பறிமுதல்!

வயிற்றில் மாத்திரை வடிவில் கடத்தப்பட்ட ரூ.2.17 கோடி தங்கம் பறிமுதல்!

விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு சென்னை விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பாலிதீன் / ரப்பர் உரைகளில் வைக்கப்பட்டு, கயிற்றால் சுற்றப்பட்ட தங்கப்பசை அடங்கிய குப்பிகளை, (மாத்திரை வடிவில்) கடத்தல்காரர்கள் விழுங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கம் கடத்தப்படுவது முதன்முறையாகச் சென்னையில் தெரியவந்துள்ளது. இதுவரை தங்கப்பசை அடங்கிய பொட்டலங்கள் மலக்குடலில் மறைத்துவைத்தே கடத்தி வரப்பட்டன என சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உளவுப்பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே 542, ஏர் அரேபியா ஜி 9471 ஆகிய விமானங்களின் மூலம் துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த திருச்சியைச் சேர்ந்த கனகவல்லி (56), நிஷாந்தி (30), கலா பிரதீப்குமார் (53), ஜெயராஜ் (55), புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (37), காபர் கான் (52), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மத் ஹிக்காம் (25) மற்றும் தஸ்லிம் பாத்திமா (34) ஆகியோர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி விமான நிலைய சுங்கத் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வயிற்றிலும் மலக்குடலிலும் தங்கம் கடத்தி வந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் சுங்கச் சட்டத்தின்கீழ் அவர்களது உடலிலிருந்து குப்பிகளை வெளியில் எடுப்பதற்கு எழுத்துபூர்வமான தன்னார்வ கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அதன்படி மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் குப்பிகளைப் பறிமுதல் செய்வதற்காக அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மிகவும் சிக்கலான இந்த முறையில், இயற்கையான வழியில் குப்பிகளை வெளியேற்றுவதற்காகக் கடுமையான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த செயல்முறை முழுவதும் நிறைவடைவதற்கு 8 நாட்கள் தேவைப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் விழுங்கியது, 15 - 24 கிராம் வரையில், ஒவ்வொரு குப்பியும் 1.1 - 1.7 சென்டிமீட்டர் அகலத்திலிருந்தது தெரியவந்துள்ளது. 8 பயணிகளின் வயிற்றிலிருந்தும் ரூ.1.28 கோடி மதிப்பில் 2.88 கிலோ எடையில் 161 குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.51.36 லட்சம் மதிப்பில் 1.18 கிலோ எடையில் 8 பொட்டலங்கள் அடங்கிய 61 குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர ரூ.30.64 லட்சம் மதிப்பில் 3 தங்கச் சங்கிலிகள், 8 தங்க வெட்டுத் துண்டுகள், 8 தங்க மோதிரங்கள், தங்கப் பசை அடங்கிய 2 பொட்டலங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக 8 பயணிகளிடமிருந்து ரூ. 2.17 கோடி மதிப்பில் 4.15 கிலோ தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 1 பிப் 2021